இணை பிரபஞ்சங்கள் (Parallel Universes )

ஒரு சிறிய அறிமுகம் .2007 ஆம் ஆண்டு இந்த வலைப்பூவை  பதிவு செய்தேன் .ஆனால் இன்று தான் முதல் பதிவு இடுகிறேன் .அந்தளவுக்கு பதிவு எழுதுவதில் ஆர்வமானவன் (?).ஆனால் கடந்த நான்கு வருடங்களாக வலைபூக்களை வாசித்து வருகிறேன் .நான்கு வருடங்கள் கழித்து  பதிவு எழுதலாம் என்று வந்திருக்கின்றேன் .எவ்வளவு தூரம் ஒழுங்காக செய்கிறேனோ தெரியாது ,ஆனாலும் உங்கள் எல்லோருடைய ஆதரவை எப்போதும்  எதிர்பார்க்கின்றேன் .

என்னுடைய முதலாவது பதிவாக என்ன போடலாம் என்று குப்புற படுத்து யோசித்ததில் அந்த கணத்தில் என் மனதில் எழுந்ததுதான் இந்த பதிவு .


சில மாதங்களுக்கு முன்பு தான் இதைப்பற்றி சிறிது விளங்கிக்கொண்டேன்(?) ..சிறுவயது முதல் இதைப்பற்றி  கேள்விப்பட்டிருந்தாலும் அப்போதெல்லாம்  எனக்கு ஒரு சதவிகிதம் கூட புரியவில்லை !.கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் ஒரு திரைப்படத்தை பார்த்து கொண்டிருந்த போது இந்த அறிவியல் புதிர் கொஞ்சம் விளங்கதொடங்கியது .உடனே ஆர்வக்கோளாறினால் இணையத்தில் அலைந்து திரிஞ்சு இந்த அறிவியல்  புதிரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டேன்.இப்போது கூட முழுமையாக விளங்கவில்லை என்பது வேறு விடயம்!ஆனாலும் இதன் கரு எனக்கு மிகவும் பிடித்துக்கொண்டது .ஆதலால் நான் விளங்கிக்கொண்டவரை   இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.


இணை பிரபஞ்சங்கள் (Parallel Universes )என்பது ஒரு கோட்பாடு (Theory).இந்த கோட்பாடு 1954  இல் Hugh Everett  என்ற பௌதிகவியல் விஞ்ஞானியால்  முன்மொழியப்பட்டது .அதாவது நாம் வாழும் உலகத்தை போன்ற அக்மார்க் "Copy  உலகங்கள்" இந்த பிரபஞ்சத்தில் காணப்படுகின்றது என்பதாகும்.இங்கு வாழ்கின்ற உயிரிகள் அவை சார்ந்த அவற்றின் செயற்பாடுகள் ,அவற்றின் நிகழ்வுகள் எல்லாவற்றினதும் Copy வேறொரு உலகத்திலும் காணப்படுகின்றதாம். .உதாரணமாக நீங்கள் இந்த பதிவை உங்கள் வீட்டில் இருந்து படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இதே போன்று இன்னுமொரு உலகத்திலும் நீங்கள் இந்த பதிவை படித்துகொண்டிருப்பீர்கலாம் !இதே போன்று இன்னும் பல உலகங்கள் இருக்கின்றனவாம். .இவற்றை Multiverse  என்கிறார்கள் .இவ்வாறன Multiverse  ஐ உள்ளடக்கிய பிரபஞ்சம் தான்  இணை பிரபஞ்சம்  (Parallel Universes ) எனப்படுகின்றது.இவற்றில் மூன்று விதமான Parallel Universes காணப்படுகின்றன (அவை  என்னவென்று என்னிடம் கேட்காதீர்கள் ..சத்தியமாக  எனக்கு விளங்கவேயில்லை வேறு யாராவதுக்கு தெரிந்திருந்தால் சொல்லுங்கள் ).இந்த மூன்று விதமான வகைகளுக்குள் சில எம்முடைய உலகத்தை விட காலவித்தியாசத்தை கொண்டிருக்குமாம் ..உதாரணமாக ஒரு உலகத்தில் இன்னும் கிறிஸ்தோபர் கொலம்பஸ்  அமெரிக்காவை  தேடிக்கொண்டு இருப்பாராம் ..எம்மால் அந்த உலகத்தை தொடர்பு கொள்ளமுடிந்தால் நாம் எம்முடைய இறந்த காலத்தை அடைய முடியுமாம்.அதேபோன்று அந்த உலகில் இருக்கின்ற நாம், எம்முடைய எதிர்காலமான இந்த உலகத்தின்  Present காலத்தை  அடைய முடியுமாம் (யப்பா !!! இப்பவே கண்ணை கட்டுதே !).சில உலகங்கள் அதே நேரத்தை கொண்டிருக்கும் .இந்த உலகில் நீங்கள் இறந்தால் அந்த உலகில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் .இந்த நேர வித்தியாசங்கள் பெரு வெடிப்பு கொள்கை (Big bang theory) மூலம் விளங்கப்படுத்தபடுகிறது(அது ஒரு பெரிய கதை ).இந்த உலகங்களை எங்களால் பாக்க இயலாது இருப்பதற்கு காரணம் ,எமது பார்வை இந்த Big bang theory இன் அடிப்படையில் ஒளியின் வேகத்தால் கட்டுப்படுத்த பட்டிருக்கின்றதாம் .

 இதை விட இந்த கோட்பாட்டை பலவிதமாக  விளக்குகிறார்கள் பெளதிகவியலாளர்கள் ! இவை எல்லாம் இப்போதும் எனக்கு புரிந்தும் புரியாமலும் இருக்கின்றது.இந்த கோட்பாட்டை அடிப்படியாக கொண்டு பல விஞ்ஞான புனைகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன் ,திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.இதை முழுமையான கருப்பொருளாக கொண்டு FRINGE என்னும் தொலைக்காட்சி நாடகத்தொடர் ஒன்று அமெரிக்க தொலைக்கட்சிகளில் 2008-2009 காலப்பகுதியில் ஒளிபரப்பபட்டதாக என் நண்பன் ஒருவர் கூறினார்.நான் அதை இன்னும் பார்க்கவில்லை .IMDB  இல் தேடிப்பார்த்தேன்  8.1 என rating போடப்பட்டிருக்கின்றது.இதை கருப்பொருளாக கொண்டு புகழ் பெற்ற Science fiction தொடரான X-Files (என்னுடைய All time தொடர் .இதை பற்றி தனியாக ஒரு பதிவு பின்பு எழுதவேண்டும் ) கூட சொல்லப்பட்டிருந்தது .

எது என்னவாக இருந்தாலும் நாங்கள் எல்லோரும் பல உலகங்களில் வாழ்ந்து கொண்டிருகின்றோம் என்பதை நினைத்து பாருங்கள் !இந்த உலகத்தில் பேணப்பட்டு வரும் அனைத்து நியதிகளும் இரண்டாக அல்லது இரண்டுக்கு மேற்பட்டவையாக   வாய்ப்பு இருக்கின்றது அல்லவா ? இனிமேல் இரண்டு பொண்டாட்டி  காரர்கள்  தைரியமாக மற்றவர்களையும் பார்த்து  "உனக்குமட்டும் பத்துபேர் எனக்கு இரண்டு பேர் இருந்தா என்ன" என்று கேள்வி கேட்கலாம்!.
-----
இது சம்பந்தமான விக்கி பீடியா links 
-----------------------------------------------
http://en.wikipedia.org/wiki/Parallel_universe_%28fiction%29

இது சம்பந்தமான் வீடியோ links 
-----------------------------------------
http://www.youtube.com/watch?v=XmyrE9I8HNg&NR=1


இந்த பதிவு உங்களுக்குபிடிக்கிறதா?பிடிக்கவில்லையா ?என்னவாயிருந்தாலும் காரணத்தை சொல்லிவிடுங்கள்!
--தபோ---

2 comments:

Thejo said...

finally you decided to post something! Fringe is a good series if you have the right cravings. May not be continuously interesting like X-Files as the episodes are interconnected. Not stand alone like X-Files.

Thabo Sivagurunathan said...

Haa haa thejo.Any way i will watch FRINGE at office one day!..Hey readers i forgot to say ,,i already mentioned that a friend told me about FRINGE."That is Mr.Thejo" ...